Skip to main content

Posts

கருத்துருவாக்கம் செயலமைப்பு

பொதுவாக கருத்துருவாக்கம் என்பது எப்படி நிகழ்கிறது என்பதை நன்கு ஆழமாக படிக்க வேண்டும். பொதுவாக, இன்ன மனிதர் அறிவாளி என்று வைத்துக்கொள்வோம். அந்த மனிதர் கொள்கையில் உறுதியுள்ளவராக ஒரு கருத்தை ஆணித்தரமாக முன்வைக்க வேண்டும். அவர், அதற்கு அறிவார்ந்த விளக்கங்களை ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும். அவர் தனக்கு தெரிந்தவற்றை ஆய்வின் அடிப்படையில் விலாவரியாக மறுமறுபடி வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால், அவருக்கு ஆரம்பத்தில் குறைந்த மக்கள்தான் கிடைப்பார்கள். அந்த வாசகர்களின் எண்ணிக்கையை பற்றி அவர் கவலைப்படக்கூடாது. ஆனால், அவர்கள் விசுவாசமானவர்களா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும். அல்லது அந்த கருத்தை ஆமோதித்தால், அந்த கருத்தை எவ்வளவு தூரம் அவர்கள் எடுத்து சொல்வார்கள், எவ்வளவு சக்திமிக்க பொஷிசனில் உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் பள்ளிப்புத்தகம், பொதுமக்கள் படிக்கும் தினசரி பத்திரிகை போன்றவை மாஸ் ஊடகங்கள்தான். ஆனால், அதற்கு என்ன வலிமை இருக்கிறது? மாசுக்கு என்று ஆழம் கிடையாது. ஆழமாக இருந்தால், மாஸ் என்ற தன்மையை அல்லது மாஸ் மக்களை ஈர்க்கும் விசையை அது இழந்து விடுக...
Recent posts

பக்தர்கள் ஆபத்தானவர்கள்

பாஜக, சுற்றுச்சூழல் தீவிரவாதிகள், சீமான் கோஷ்டிகள், விடுதலைப்புலிகள் யாராகட்டும்... அவர்களின் பக்தர்களாக இருக்கும் மூடர்களைப் பார்க்கும்போது வேதனையாகவும், நாட்டுக்கு ஆபத்தாகவும் இருக்கிறது. விடுதலைப்புலிகளால் எத்தனை வலிகள், பாதிப்புகள், அழிவுகள், உயிர்ச்சேதங்கள், நெருக்கடிகள், வேதனைகள்... அத்தனையும் நடக்கிறது.. சுற்றி நடக்கிறது. அப்போதும் கூட, எதார்த்தத்தை புரிந்துகொள்ள மறுக்கிற மக்களாக இவர்கள் இருக்கிறார்கள். நல்லதிலிருந்து கெட்டதை பிரித்து அறிய முடியாத, அதை உணர முடியாத அளவுக்கா மூடர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு என்று வராதவரை அவர்களால் உணர முடியாதா? அதுவரை அடுத்தவர்களுக்கு அநியாயம் நடப்பதை கண்டும் காணாமல் இருப்பார்களா? இது சங்கிகளுக்கும் பொருந்திப்போகும். இருநிலை கேட்டல், நியாய அநியாயத்தை புரிந்துகொள்ளல் ஆகியவற்றில் இவர்கள் ஏன் இத்தனை அசட்டையாக கல்நெஞ்சத்தோடு வைராக்கியமாக இருக்கிறார்கள். ஒன்றை சொல்ல வரும்போது, அதை காதுகொடுத்து கேட்க தயாரில்லாமல் எதையும் மறுத்துப்பேசும் மனநிலையில் இருக்கிறார்கள். இத்தகையவர்கள் பேசும்போது நன்றாக பேசுவது போல் மேற்பார்வைக்கு தெரிந்தாலும், இவர்கள் தன்ம...