பாஜக, சுற்றுச்சூழல் தீவிரவாதிகள், சீமான் கோஷ்டிகள், விடுதலைப்புலிகள் யாராகட்டும்... அவர்களின் பக்தர்களாக இருக்கும் மூடர்களைப் பார்க்கும்போது வேதனையாகவும், நாட்டுக்கு ஆபத்தாகவும் இருக்கிறது. விடுதலைப்புலிகளால் எத்தனை வலிகள், பாதிப்புகள், அழிவுகள், உயிர்ச்சேதங்கள், நெருக்கடிகள், வேதனைகள்... அத்தனையும் நடக்கிறது.. சுற்றி நடக்கிறது. அப்போதும் கூட, எதார்த்தத்தை புரிந்துகொள்ள மறுக்கிற மக்களாக இவர்கள் இருக்கிறார்கள். நல்லதிலிருந்து கெட்டதை பிரித்து அறிய முடியாத, அதை உணர முடியாத அளவுக்கா மூடர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு என்று வராதவரை அவர்களால் உணர முடியாதா? அதுவரை அடுத்தவர்களுக்கு அநியாயம் நடப்பதை கண்டும் காணாமல் இருப்பார்களா? இது சங்கிகளுக்கும் பொருந்திப்போகும். இருநிலை கேட்டல், நியாய அநியாயத்தை புரிந்துகொள்ளல் ஆகியவற்றில் இவர்கள் ஏன் இத்தனை அசட்டையாக கல்நெஞ்சத்தோடு வைராக்கியமாக இருக்கிறார்கள். ஒன்றை சொல்ல வரும்போது, அதை காதுகொடுத்து கேட்க தயாரில்லாமல் எதையும் மறுத்துப்பேசும் மனநிலையில் இருக்கிறார்கள். இத்தகையவர்கள் பேசும்போது நன்றாக பேசுவது போல் மேற்பார்வைக்கு தெரிந்தாலும், இவர்கள் தன்மை ஆபத்தானதல்லவா? ஆக, முன்முடிவுகளை செய்துகொண்டு, தீவிர நிலையை எடுத்துவிட்ட ஒருவனால், கண்மூடித்தனமான பற்று கொண்டுவிட்ட ஒருவனால், நாட்டுக்கு ஆபத்தே விளையும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எந்த காரியத்தையும் செய்துவிட்டு, அதனால் தீயவிளைவுகள் ஏற்படும்போது, அதற்கு முரட்டு முட்டைக்கொடுப்பார்கள். அதற்காக பொய்யான ஆதாரங்களை திரட்டுவார்கள். வரலாற்றையே தங்கள் வசதிக்கு திரிப்பார்கள். உணர்ச்சிவசப்பட்டு நடிப்பார்கள். முதலைக்கண்ணீர் வடிப்பார்கள். தங்கள் பிரச்னையிலிருந்து திசைதிருப்ப, புதிய பிரச்னைகளை உருவாக்குவார்கள். இவர்கள் அழிவு சக்திகள். இவர்களால் ஆக்கப்பூர்வமாக எதையுமே செய்ய முடியாது. எத்தனை ஆதாரங்களைக் கொடுத்தாலும் அவர்களைத் திருப்திப்படுத்த முடியாது. தவறு செய்தவனே தன் தவறை ஒப்புக்கொண்டாலும், பக்தர்கள் அதை ஏற்கமாட்டார்கள். அதற்கு ஒரு முட்டு கொடுத்து பேசுவார்கள். ஆக, Objective Analysis செய்யக்கூடிய மனிதர்களாக நாம் இருக்க வேண்டும். நாட்டின் நிலையை அவதானித்து, அதன்படி பொறுமையாக முடிவுகளுக்கு வர வேண்டும். புதிய ஆதாரங்கள் உங்கள் நிலையை தவறு என்று உணர்த்தினால், அதிலிருந்து தம்மை மாற்றிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். Adamant ஆக இருப்பது ஆபத்து. தவறு என்றால், அதை தவறு என்று சொல்ல வேண்டும். நம்மைச் சார்ந்தவர்கள், அதைக்கண்டும் காணாமல் போக வேண்டும் என்று நினைக்கக்கூடாது. நம்முடைய பெரும்பான்மை மக்கள் அப்படி இருக்கிறார்கள் அதனால் நாமும் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்துவிடக்கூடாது. தவறு என்பதற்கான ஆதாரம் கிடைத்த உடனேயே, அதை மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்தும் திராணியை நெஞ்சுரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தவறுக்கு முட்டுக்கொடுக்காமல், அதை எதிர்த்து களமாடுகிற தைரியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களையே நாம் உள்வாங்க வேண்டும். அதன்படி, ஒரு முடிவெடுத்து உறுதிப்போக்கை கடைப்பிடித்தால் பிரச்னை இல்லை. அது நன்மையே. அதேசமயம், பக்தர்களுடன் விவாதம் செய்து, அதை பொதுமக்களிடத்தில் வெளிப்படுத்தி அவர்களின் பார்வைக்கு உட்படுத்தி, உண்மையை காட்ட வேண்டும். அப்போது, பொதுவானவர்கள் நல்லோர்கள் நமக்கு ஆதரவு கொடுப்பார்கள். இதற்காக விவாதம் செய்யலாம். ஆனால், பக்தர்களை அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது. மிகவும் சிரமமானது. அவர்களை மையமாக வைத்து விவாதித்தால் அவநம்பிக்கை அடைந்துவிடுவோம்.

Comments
Post a Comment